மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடை யே இயங்கவிருக்கும் அதிவேக ரயில் சேவையின் பயண வழியில் உள்ள நிறுத்துமிடங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடப் படுவதாக மலேசியாவின் MyHSR நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அலி ஹம்சா தெரிவித்துள்ளார். கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயிலின் பயண நேரம் 90 நிமிடங்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிறுத்து மிடங்கள் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில்: நிறுத்தங்கள் குறித்து தொடரும் ஆய்வு
1 mins read
-

