வேலையிட மரணங்கள்: விபத்தில்லாத நிலை உருவாக வேண்டும் - மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே

வேலையிட மரணங்கள்: விபத்தில்லாத நிலை உருவாக வேண்டும் - மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே

1 mins read
275f6d9d-8d04-433a-8c83-284a0c892738
-

வேலையிட மரணங்களைத் தடுப்பதற்கு தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதாது என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறியுள்ளார். வேலையிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நேற்று கரையோரப் பூந்தோட்டங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருடன் 'விஷன் சீரோ' என்ற நடைப்பயிற்சியை மேற் கொண்ட அமைச்சர் லிம், "2016ஆம் ஆண்டின் பாதியைக் கூடக் கடக்காத நிலையில் 26 ஊழியர்கள் உயிர்களை இழந் துள்ளனர்," என்று அவர் வருத் தத்துடன் தெரிவித்தார். இவர்களில் எட்டு பேர் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந் துள்ளனர் என்றும் ஆகக் கடைசி மரண சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். "கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கூடுதலாக எட்டு மரணங்கள், அதாவது மரண விகிதம் 40% அதிகரித்துள்ளது.