'தாய்மொழி நூல்களைப் படிக்கவில்லை எனில் மொழி நிலைத்திராது'

'தாய்மொழி நூல்களைப் படிக்கவில்லை எனில் மொழி நிலைத்திராது'

1 mins read
7d9316ba-33ce-4219-9265-ca2901ecf0d5
-

சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழிகளாக இருக்கின்ற சீனம், மலாய், தமிழ்மொழி உள்ளிட்ட தாய்மொழிப் புத்தகங்களைப் படிக்கவில்லை என்றால் அந்த மொழிகள் சிங்கப்பூரில் புழக்கத்தில் இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் எச்சரித்து இருக்கிறார்.

இத்தகைய ஒரு நிலை ஏற்பட நாம் விட்டுவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். "இருமொழிக் கொள்கையை எந்த அளவுக்கு மேம்படுத்த விரும்புகிறோமோ அந்த அளவுக்குப் பள்ளிக்கூடத் தேர்வுக்கு அப்பாலும் தாய்மொழியில் நாட்டத்தை ஏற்படுத்த நாம் விரும்புகிறோம்," என்று அமைச்சர் குறிப்பிட்டார். கலாசாரம், வரலாறுகளைப் புரிந்துகொள்ள தாய்மொழி மிகவும் முக்கியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.