வட்டாரப் பாதுகாப்புக்கு பொதுவான குறிக்கோள்களும் கோட்பாடுகளும் அவசியம் என தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கூறியுள்ளார். கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற 15வது ஆசிய தற்காப்புச் சேவைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நான்காவது புத்ராஜெயா கலந்துரையாடல் ஆகிய வற்றில் டாக்டர் இங் கலந்து கொண்டார். மலேசிய தற்காப்பு, பாதுகாப்புக் கழகம் ஏற்பாடு செய்த புத்ராஜெயா கலந்துரையாடலில் துருக்கிய தற்காப்பு துணை அமைச்சருடன் இணைந்து 'மாபெரும் சக்திகளின் செல்வாக்கு, வட்டார பாதுகாப்புக் கட்டமைப்பு' எனும் தலைப்பில் டாக்டர் இங் பேசினார். தற்காப்பு அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளார்கள் ஆகியோர் ஒன்றாகக் கூடி தற் காப்பு, பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் தளமாக புத்ராஜெயா கலந்துரையாடல் விளங்கு கிறது.
'பொதுவான குறிக்கோள்கள், கோட்பாடுகள் அவசியம்'
1 mins read

