மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், பயணத்தின் இரண்டாவது கட்டமாக நேற்று ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் சென்றடைந்தார். அங்கு ஜெருசலத்தின் ஹீப்ரு பல்கலைக்கழகம் பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிங்கப்பூருக்கும் இஸ்ரேலுக்குமான நீண்டகால உறவை எடுத்துக்கூறினார். சிங்கப்பூரின் ஆயுதப் படையை உருவாக்கியது முதல், நாட்டின் தொழில்நுட்ப ஆய்வு மேம்பாட்டில் இணைந்து பணியாற்றுவது வரை இஸ்ரேலின் அளப்பரிய பங்கை அவர் விவரித்தார்.
பிரதமர் லீ: நாட்டின் தற்காப்பில் இஸ்ரேலின் பங்கு அளப்பரியது
1 mins read

