சுத்தியல், கத்தரிக்கோல், கத்தி, இடிகல், மூங்கில் கம்பு போன்ற பல ஆயுதங்களைக் கொண்டு தம்முடைய முன்னாள் முதலாளி ஸாரியா முகமது அலி, 54, தம்மைத் தாக்கியதாக 35 வயதான இந்தோனீசியப் பணிப்பெண் கனிஃபா நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார். அவர் சுமத்திய 28 குற்றச்சாட்டுகளில் 12 அரசுதரப்பில் விசாரிக்கப்படுகின்றன. பாத்திரம் ஒன்றால் கனிஃபாவைத் தாக்கிய குற்றச்சாட்டை ஸாரியாவின் கணவர் முகமது தாலன், 56, எதிர்நோக்குகிறார்.
தாக்கி காயம் விளைவித்ததாக தம்பதி மீது இந்தோனீசிய பணிப்பெண் குற்றச்சாட்டு
1 mins read

