மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் 83,000 வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருட்களை நேற்று பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் காரர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிடிபட்டவர்களிடம் இருந்து அவர்கள் பறிமுதல் செய்தனர். ரிவர்வேல் கிரசெண்ட்டில் பணியிலிருந்த அதிகாரிகள் திங்கட்கிழமை காலை சந்தேக நபர்களை கண்டதாகக் கூறியது சிஎன்பி எனப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. போதைப்பொருள் கடத்தல் காரர் என்று சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரரான 30 வயது ஆடவரும் அவருடன் இருந்த பெண்ணும் மற்ற இருவரைச் சந்தித்ததாக சிஎன்பி கூறியது. சந்திப்பிற்குப் பிறகு, காரில் சென்ற ஒருவர் உடனடியாக பிடிபட்டார். மற்ற மூவரும் மவுண்ட் பேட்டனில் பிடிபட்டனர். காரைச் சோதனைச் செய்த போது 450 கிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருள், 15 கிராம் ஹெராயின், 50 கிராம் அபின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
$83,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
1 mins read
-

