அடுத்த மாதம் கார்களை வாங்க அதிக உரிமைச் சான்றிதழ்கள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் நேற்றைய ஏலத்தில் கார்களுக்கான உரிமைச் சான்றிதழ் விலை அதிகரித்தது. 1600சிசி வரையிலான கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $47,300 ஆக அதிகரித்தது. 1600சிசிக்கும் அதிக கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $2,602 கூடி $49,602 ஆக இருந்தது. பொதுப் பிரிவுச் சான்றிதழ் கட்டணமும் கூடியது. இது $49,501 ஆக இருந்தது. வர்த்தக வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் கொஞ்சம் குறைந்து $43,002 ஆக இருந்தது. மோட்டார்சைக்கிளுக்கான கட்டணம் $2 குறைந்து $6,501 ஆக இருந்தது.
வாகனச் சான்றிதழ் கட்டணம் அதிகரிப்பு
1 mins read

