முஹம்மது ஃபைரோஸ்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யின் மெழுகுச் சிலை சிங்கப்பூரில் செந்தோசாவிலுள்ள டுசாட்ஸ் (Madame Tussauds) அரும்பொருளகத்தில் இடம் பெறுகிறது. அத்துடன், லண்டன், ஹாங் காங், பேங்காக் ஆகிய நகரங் களிலும் அவருடைய சிலை இடம்பெறவுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் புதுடெல்லியில் சிலையைத் திரு மோடி நேரடி யாகப் பார்வையிட்டார். சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திருமதி விஜய் தாக்கூர் சிங், செந்தோசாவிலுள்ள டுசாட்ஸ் அரும்பொருளகத்தில் திரு மோடியின் மெழுகுச் சிலையை நேற்று அதி காரபூர்வமாகத் திறந்துவைத்தார். சிலையைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக உரையாற்றிய திருமதி விஜய், இங்கு திரு மோடியின் மெழுகுச் சிலை இடம் பெறுவது உலகளவில் அவரின் உயர்ந்த நிலைக்கான அங்கீகாரம் என்று புகழாரம் சூட்டினார்.
தமது மெழுகுச் சிலையைப் புதுடெல்லியில் நேரில் பார்வையிட்டு அதை அலங்கரிக்கும் பிரதமர் மோடி. படம்: Madame Tussauds சிங்கப்பூர் அரும்பொருளகம்

