2015ல் ஆட்குறைப்பு 15,580; 2014 அளவைவிட அதிகம்

2015ல் ஆட்குறைப்பு 15,580; 2014 அளவைவிட அதிகம்

1 mins read

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் வேலை இழந்தவர்கள் 2014ஆம் ஆண்டின் அளவைவிட அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை இதனைக் காட்டியது. சென்ற ஆண்டில் மொத்தம் 15,580 பேர் ஆட்குறைப்புக்கு ஆளானார்கள். இது 2014ஆம் ஆண்டின் அளவைவிட 2,650 அதிகம். ஆட்குறைப்பு சென்ற ஆண்டுடன் ஐந்தாவது ஆண்டாக அதிகரித்து வந்துள்ளது. இருந்தாலும் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 1.9% ஆகக் குறைந்தே இருந்தது.

சென்ற ஆண்டில் எல்லா துறைகளிலுமே ஆட்குறைப்பு அதிகம். குறிப்பாக தயாரிப்புத் துறையில் இது அதிகமாக இருந் தது. உலக அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியும் கடல்துறை, தயாரிப்புத் துறை பொருட்களுக் குத் தேவை குறைந்ததும் இந்தத் துறைகளில் 5,210 பேருக்கு வேலை போனதற்கான காரணங் களாக இருந்தன. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டின் அளவைவிட 1,240 அதிகம் என்பதும் குறிப்பிடத்தக் கது. சேவைத் துறையும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. அந்தத் துறையில் 8,510 வேலைகள் இழக்கப்பட்டன. இதுவும் அதற்கு முந்தைய ஆண்டின் அளவைவிட 1,250 அதிகம்.