மே 7: புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்

மே 7: புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்

1 mins read

புக்­­­கிட் பாத்­­­தோக் தனித் தொகு­­­தி­­­யில் இடைத் தேர்­­­தல் மே 7ஆம் தேதி நடை­­­ பெ­­­ற­­­வி­­­ருக்­­­கிறது. பொதுத்தேர்­­­தல் நடந்து முடிந்து 8 மாதங்களுக்­­­குள் இரண்டா­­­வது முறை­­­யாக அத்தொகுதி மக்கள் மீண்­­­டும் வாக்­­­களிக்க உள்­­­ள­­­னர். அதி­­­பர் டோனி டான் கெங் யாம் நேற்று அதற்கான தேர்­­­தல் ஆணையைப் பிறப்­­­பித்­ ­தார். வேட்­­­பா­­­ளர்­­­கள் வேட்­­­பு­­­ம­­­னுத் தாக்கல் செய்ய வேண்­­­டிய நாள் ஏப்­­­ரல் 27ஆம் தேதி. கெமிங் தொடக்­­­கப்­­­பள்ளி வேட்­­­பு­­­ம­­­னுத்­­­தாக்­­­கல் செய்­­­யும் மைய­­­மாக அறி­­­ விக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. ஒன்­­­பது நாட்­­­கள் பிர­­­சா­­­ரத்­­­திற்­­­குப் பின்னர் தேர்­­­தல் நாளுக்கு முந்தைய நாளான மே 6ஆம் தேதி பிர­­­சார ஓய்வு நாளா­­­கக் கடைப்­­­பி­­­டிக்­­­கப்­­­படும்.

மக்கள் செயல் கட்சி, சிங்கப்­­­பூர் ஜன­­ நா­­­ய­­­கக் கட்சி ஆகிய இரு கட்­­­சி­­­களுக்­­­கிடையே மட்­­­டும் போட்டி நில­­­வும் என்று எதிர்­­­பார்க்­­­கப்­­­படு­­­கிறது. கடந்த மார்ச் 12ஆம் தேதி அந்தத் தனித் தொ­­­கு­­­தி­­­யின் ஆளும் மக்கள் செயல் கட்சி உறுப்பினரான டேவிட் ஓங், 54, சொந்தக் கார­­­ணங்களுக்­­­காக புக்­­­கிட் பாத்­­­தோக் நாடா­­­ளு­­­மன்ற உறுப்­­­பி­­­னர் பத­­­வி­­­யில் இருந்­­­தும் கட்­­­சி­­­யில் இருந்­­­தும் விலகுவதாக அறிவித்தார்