ஐந்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் காயமடைந்தனர். இதனால் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு கார்கள், இரண்டு லாரிகள், ஒரு பேருந்து மோதிக் கொண்ட இந்த விபத்து பற்றி நேற்று காலை 6.49 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது. இந்த விபத்தைக் கண்ட ஒருவர், வாகனமோட்டிகள் இந்த சாலையைத் தவிர்க்குமாறு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டு கொண்டார். காயமடைந்த மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்தின்போது ஒன்றுக்கொன்று மோதி சேதமடைந்த வாகனங்கள். படம்: மோஸஸ் லிம்மாவின் ஃபேஸ்புக் பக்கம்
ஐந்து வாகனங்கள் மோதல்; மூவர் காயம்
1 mins read
-

