அபின் வைத்திருந்த மலேசிய நடிகருக்கு எட்டு மாத சிறை

அபின் வைத்திருந்த மலேசிய நடிகருக்கு எட்டு மாத சிறை

1 mins read
588daaa7-735f-4913-9d90-e49d1113c9cc
-

அபின் எனும் போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்த குற்­றத்­திற்­காக மலேசிய நடிகர் டோனி யூசூ­ஃப்­பிற்கு (படம்) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவ­டி­யில் பிடிப்­பட்ட ஆண்டனி ஜோசப் ஹெர்மஸ் ரஜிமன் என்ற உண்மை பெயர் கொண்ட அந்­ந­டி­கர் 4.56 கிரா­மிற்கு குறை யாத அபின் வைத்­தி­ருந்த குற்­றத்தை ஒப்புக்கொண்டார். 39 வயதான அவர் பட வேலையாக சமூக பார்வை­யா­ளர் விசாவில் சிங்கப்­பூர் வந்த­ தாக நீதி­மன்றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. தமது சொந்த உப­ யோ­கத்­திற்­காக அவர் அபின் கொண்டு வந்தார்.

குடி­நுழை­வுச் சோதனை முடி­வடைந்த பின்னர், அபின் பொட்­ட­லத்தைத் திரும்ப எடுத் ­துக்­கொள்­ளும் எண்­ணத்­து­டன் அதைப் பேருந்­தின் கடைசி இருக்கைக்கு மேல் அவர் வைத்தார். குடி­நுழைவு, சோதனைச் ­சா­வடி அதிகாரி ஒருவர் சோதனை யின் போது அந்த அபின் பொட்­ட­லத்தைக் கண்டார். அதன்­பி­றகு பய­ணி­களி­டம் மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வி­னர் மேற்­கொண்ட விசா­ரணை­யின்­போது மலேசிய நடிகர் அபின் பொட்­ட­லம் தன்­னுடை­யது என்பதை ஒப்­புக்­கொண்டார்.