சிஜ கட்சி: பரிவுமிக்க சமூகமாக மாற்றுவோம்

சிஜ கட்சி: பரிவுமிக்க சமூகமாக மாற்றுவோம்

1 mins read
c63e690c-ac91-4500-baac-cd5c32b4da0a
-

குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வரை­யும் உள்­ள­டக்கி ஒரு பரி­வு­மிக்க சமூ­க­மாக புக்கிட் பாத்தோக் தொகுதியை உரு­மாற்­று­வோம் என்று சிங்கப்­பூர் ஜன­நா­யக கட்சி தெரி­வித்­துள்­ளது. புக்கிட் பாத்தோக் தொகு­திக்­கான இடைத்­தேர்­த­லில் போட்­டி­ யி­டும் எதிர்­த­ரப்பு சிங்கப்­பூர் ஜன­நா­யகக் கட்சி நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்தைக் கூட்டி அத்­தொ­கு­திக்­கான திட்­டங்களை பட்­டி­ய­லிட்­டது. அங் மோ கியோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்­டத்­தில் பேசிய கட்­சி­யின் தலைமைச் செய­லா­ள­ரும் அத்­தொ­கு­திக்­கான அக்­கட்­சி­ யின் தேர்தல் வேட்­பா­ள­ரு­மான டாக்டர் சீ சூன் ஜுவான், "நான் இத்­தொ­குதியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் இங்­குள்ள முதி­ய­வர்­களுக்­கும் குறைந்த வருமான குடி­யி­ருப்­பா­ளர்­களுக்­கும் உதவும் வகையில் 'குடும்பம் ஒன்றைத் தத்­தெ­டுக்­க­வும்' எனும் திட்­டத்தை அறி­மு­கம் செய்வேன். "வச­தி­யுள்ள குடும்பங்கள் இந்தப் பிரி­வின­ருக்கு தங்கள் நேரத்தை­யும் வளங்களை­யும் தந்து உதவி அவர்­களின் நல்­வாழ்­வுக்கு பொறுப்பேற்­கும். "இதன்­மூ­லம், புக்கிட் பாத்தோக் சமூ­கத்தை இன்னும் நெருக்­க­மாக்கி, குடி­யி­ருப்­பா­ளர்­களிடையே பிணைப்பை மேலும் வலுப்­படுத்­து வோம்.