சுற்றுப்புறத்தைக் கட்டிக்காக்க ஆதரவு தரும் வகையில் ஓசிபிசி வங்கி ஊழியர்களான தொண்டூழியர்கள் இந்த ஆண்டு முழுவதும் பல செயல்திட்டங் களை நிறைவேற்ற உள்ளனர். இதனையொட்டி ஓசிபிசி வங்கி, அதன் துணை நிறுவனங் களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400 தொண்டூழியர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் நேற்று 3 கிமீ.க்கும் அதிக நீளமுள்ள பாசிர் ரிஸ் கடற்கரையைச் சுத்தப்படுத்தி 1, 500 கிலோ குப்பையை அகற்றினர். விரயமாகும் உணவைப் பள்ளிக்கூடங்கள், நிறுவனங் களுடன் சேர்ந்து உரமாக மாற்றுவது, மறுபயனீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் முறைகள் பற்றி ஓசிபிசி சமூக பங்காளிகளுக்குப் போதிப்பது, சிறப்பு உதவிகள் தேவைப்படும் மக்களுக்காகவே தோட்டம் ஒன்றை நிர்மாணிப்பது முதலானவை திட்டமிடப்பட்டுள்ள செயல்திட்டங்களில் அடங்கும். படம்: ஓசிபிசி வங்கி
உதவிக்கரம் நீட்டும் ஓசிபிசி
1 mins read

