புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலையொட்டி அரசியல் நன்கொடை சான்றிதழுக்காக மொத்தம் ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்தது. இந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 1 மணி வரை காலஅவகாசம் இருந்தது. மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பேராளர்களைத் தேர்தல் துறையில் நேற்று காணமுடிந்தது. புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடக்கிறது.
புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்: சான்றிதழ் பெற 5 விண்ணப்பங்கள்
1 mins read

