சாங்கி விமான நிலையத்தில் பிரச்சினை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்

சாங்கி விமான நிலையத்தில் பிரச்சினை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்

1 mins read
ecd193bb-5465-4f45-93c3-3720cec005e5
-

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் நேற் றுக் காலை ஆடவர் ஒருவர் பிரச் சினை கொடுத்து விட்டார். அங்குள்ள பயண உறுதி முகப்புக் கூடத்தில் மேல் ஏறிக் கொண்டு அவர் கீழே இறங்கி வர மறுத்தார். மேலும் அவரை நெருங்க முயன்ற போலிஸ் அதிகாரிகளிடம் அடிப்பது போல அவர் குடையை அசைத்துக் காட்டியதுடன் தமது சட்டையையும் கழற்றி விட்டார் என்று ‌ஷின் மின் நாளிதழ் தெரி வித்தது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இதுபற்றி நேற்றுக் காலை 9.06 மணிக்கு டுவிட்டரில் செய்தி ஒன்றை அனுப்பினார். அவர் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து அந்த ஆடவர் காலணி இல்லாமல், கோடு போட்ட சட்டையும் ஜீன்சும் அணிந்திருந்தார் என்று தெரிய வந்தது. மற்றொரு புகைப்படத்தில் அவர் ஒரு குடையுடன் இரு அட் டைப் பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்தார். சுற்றுப்பயணியான 35 வயது குமாரி சாய் என்பவர் தாம் அவரை காலை 10.00 மணிக்குப் பார்த்த தாக ‌ஷின் மின்னிடம் தெரிவித் தார்.

பயண உறுதி முகப்புக் கூடத் துக்கு மேலே ஆடவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். படம்: ஷாலட் கோர்டே