சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்

சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்

1 mins read

இந்­தோ­னீ­சியக் கடற்­ப­கு­தி­யில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்­பூ­ர­ரான 27 வயது குமாரி நியோ க்யூ பிங் வெரா அங்கு உயி­ரி­ழந்­தார். ஞாயிறு அன்று இந்­தோ­னீ­சி­யா­வின் கொமொ­டு­வின் வட­ கிழக்­கி­லுள்ள கிலி லாவா என்ற இடத்­தில் முக்­கு­ளிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. தொடர்ந்து அவரைத் தேடும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது. அவரது உடல் முக்­கு­ளிப்­புப் பகு­தி­யில் நேற்றுக் காலை 10.55 மணி அளவில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய தேடல், மீட்பு முகவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி யது. அவரது உடல் தற்போது இந்­தோ­னீ­சி­யா­வின் சிலோம் மருத்­து­வ­மனை­யில் உள்ளது.