தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை 'டைப் 2' வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய மிகப்பெரிய ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்க 2,300 பேர் தேவைப்படுகின்றனர். அவர்கள் நீரிழிவு நோய் இல்லாதவர்களாக அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலைமை உள்ளவர்களாக அல்லது ரத்தத்தில் சற்றுக் கூடுதலான சர்க்கரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு காலத்துக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வேண்டும். ஆண்டில் இரு முறை, ரத்த சர்க்கரை அளவைக் கணக்கெடுக்க தேசியபல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை
1 mins read

