சிறுபான்மை வேட்பாளர்களுக் காகவே நடத்தப்படும் கட்டுப்படுத் தப்பட்ட தேர்தல் ஒன்றில் தேர்ந் தெடுக்கப்படும் அதிபர் ஒரு வருக்கு அந்தப் பதவிக்கான கண்ணியமும் அரசியல் ரீதியி லான தார்மீக உரிமையும் போதிய அள வுக்கு இல்லாமல் இருக்கக் கூடும் என்று கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜில் லியன் கோ கருத்து தெரிவித்தார். அத்தகைய ஓர் அதிபர் அவர் பிரதிநிதிக்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு பேராளராக மட்டுமே பார்க்கப் படுவார் என்றும் அவர் குறிப்பிட் டார். மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தல் முறைக்குப் பல மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டிருக் கின்றன. அந்த மாற்றங்கள் பற்றி அர சமைப்புச்சட்ட ஆணைக்குழு இப்பொழுது பொதுக் கருத்து அறிதலை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி திரு சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அந்த ஆணையம் மூன்றாவது கருத்து அறிதலை நேற்று நடத்தியது.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநரான டாக்டர் கோ அந்தக் கருத்து அறிதலில் தன்னுடைய கருத்துகளை முன் வைத்தார். சிங்கப்பூரின் அதி பரைத் த-குதியின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் பல இனக் கோட்பாட்டைக் காப்பவராகவும் இருக்க வேண் டும். அப்போதைக்கு அப்போது அதிபர் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த சட்டத்தை மாற்று வதற்குப் பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வருக்கு அதிக ஊக்குவிப்புகள் வழங்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். இதேபோன்ற கடுமையான நிபந்தனைகள் எல்லா வேட்பாளர் களுக்கும் விதிக்கப்படும் என்று ஆணையத்தின் ஓர் உறுப்பின ரும், அரசாங்க தேர்வாணையத் தின் தலைவருமான எடி டியோ அப்போது சுட்டினார்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வுத் துணை இயக்குநர் கோ (இடது) ஆய்வாளர் டான் வெய் வெய்யுடன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

