கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கிராஞ்சி விரைவுச் சாலையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, மோட்டார்சைக்கிள் ஓட்டியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 34 வயது நூர் அகியா அகமட்டுக்கு மூன்று வார சிறைத் தண்டனையும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடையும் நேற்று விதிக்கப்பட்டன. அன்று 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடது தடத்தில் காரை ஓட்டிச் சென்ற அரசாங்க ஊழியரான நூர் அகியா, போக்குவரத்து நெரிசலினால் முன்னே சென்ற கார் நிறுத்தப் பட்டதை முதலில் கவனிக்கவில்லை. திடீரென அதைக் கவனித்து பிரேக்கை அழுத்திய அவர், முன்னாலிருந்த காரில் மோதாமலிருக்க காரை இடதுபுறம் திருப்பியபோது 34 வயது திரு ஜெரமி லிம் இயூ லியோங்கின் மோட்டார்சைக்கிளை மோதினார். நடுத்தடத்திற்குத் தள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள், ஒரு காரில் மோதியது. வண்டியிலிருந்து தூக்கி ஏறியப்பட்ட திரு ஜெரமி, மற்றொரு வாகனத்தின் அடியில் விழுந்தார். வாகனம் அவர் மீது ஏறியது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழிந்தார். சிறைத் தண்டனையை எதிர்த்து மனுச் செய்திருக்கும் நூர் அகியா $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாதுக்கு 3 வார சிறை, வாகனம்ஓட்ட 5 ஆண்டுகள் தடை
1 mins read

