தேசிய ஆவணக் காப்பகத்தில் மேலும் பல அரிய தகவல்கள்

தேசிய ஆவணக் காப்பகத்தில் மேலும் பல அரிய தகவல்கள்

1 mins read

தேசிய நாள் உரைகள் உட்பட அரசாங்கத்தின் ஆவணங்கள் பலவும் தேசிய ஆவணக் காப்பக இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. அண்மையில் மேலும் 500 ஒலி=ஒளி பதிவு களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தொடர்பு தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் நேற்று நடந்த அமைச்சின் பணித்திட்ட கருத்தரங்கில் தெரிவித்தார். தேசியநாள் உரைகள், ஆண்டுக்காண்டு நாடு எதிர்கொண்ட முக்கிய மேம்பாடுகள், சவால்கள் போன்றவற்றை http://www.nas.gov.sg/archivesonline/ என்னும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையத்தளத்தில் காணலாம்.

இதில் 1966 முதல் 1979 வரையில் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ, ஹொக்கியன் மொழியில் ஆற்றிய உரைகளும் உள்ளன. நாட்டின் வளர்ச்சி யில் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுத் தலைவர்களின் பார்வையை இந்த உரைகள் வெளிப்படுத்துகின்றன என்றார் அமைச்சர் யாக்கூப். "சிங்கப்பூர் எதிர்நோக்கிய சவால்களையும் நம் தலைவர்கள் மக்களுடன் பகிர்ந்துகொண்ட இலக்குகளை யும் சிங்கப்பூரைச் செப்பனிட்டு இன்றைய நிலைக்குக் கொண்டு வந்த கொள்கைகளையும் நன்கு புரிந்துகொள்ள தேசிய நாள் உரைகள் உதவுகின்றன," என்றார் அமைச்சர்.