சிங்கப்பூர் வருகையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடும் நோக்கில் போலியாக immisg-=mom.in என்னும் இணையத்தளம் செயல்படுவதாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் எச்சரித்து உள்ளது. விசா விண்ணப்ப எண்களையும் பாஸ்போர்ட் எண்களையும் அந்த இணையத் தளம் கேட்டு வருவதாக ஆணையம் கூறுகிறது. எனவே எந்தவொரு குடிநுழைவுத் தகவலுக்கும் ஆணையத்தின் அதிகாரபூர்வ www.ica.gov.sg என்னும் இணையத்தளத்தை மட்டுமே நாடுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.
போலி குடிநுழைவு இணையத்தளம்
1 mins read

