கட்டுமானத் தளத்தில் 24 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்

கட்டுமானத் தளத்தில் 24 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
19994f56-ed4b-4afd-bcf0-7b229454b71b
-
Google News Preferred Icon

ஊழியர் ஒருவர் மரணமடைந் ததைத் தொடர்ந்து தெம்பனிஸ் கட்டுமானத் தளத்தில் பாரம் தூக் கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ள தாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள தொழிற்பேட்டையில் சன்வே கட்டுமானத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மரணம் நிகழ்ந்தது. பாரந்தூக்கும் இரும்புத் தண்டுகள், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை சன்வே கட்டுமான நிறுவனம் தயாரிக்கிறது.

லாரி ஒன்றிலிருந்து கம்பி வலைகளை இறக்க உதவி செய்துகொண்டு இருந்த வெளி நாட்டு ஊழியர் ஒருவர் மீது அந்த வலைகள் விழுந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் தெரிவிக் கின்றன. அதைத் தொடர்ந்து காய மடைந்த அவர் சம்பவ இடத் திலேயே மாண்டுவிட்டதாக மருத் துவர்கள் தெரிவித்ததாக சிங்கப் பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மாண்ட ஊழியரின் வயது 24 என்றும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அது குறிப்பிட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10.58 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாக உதவி கேட்டு போலிசுக்கு அழைப்பு சென்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கட்டுமான வளாகத்தில் உள்ள அனைத்து பாரந்தூக்கும் நட வடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாண்ட ஊழியரின் அருகில் மற்ற கட்டுமான ஊழியர்கள் நிற்பதாக மனோ இளங்கோவன் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட படம். படம்: ஃபேஸ்புக்