சாகசப் பள்ளியின் பொது வரவேற்பு

சாகசப் பள்ளியின் பொது வரவேற்பு

1 mins read
63328ae6-b0c8-418b-86bf-9f55b32ed921
-

புலாவ் உபினில் இருக்கும் சிங்கப்பூர் வெளிப்புற சாகசப் பள்ளி தன்னுடைய 49 ஆண்டு கால வரலாற்றில் முதன் முதலாக பொது வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை சனிக்கிழமை நடத்தியது. வெளிப்புற சாகசப் பள்ளியைப் பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பலவற்றையும் தெரிந்துகொண்டார்கள். கயிறு வழியாக மேலே ஏறுதல் போன்ற பலவற்றையும் அவர்கள் முயன்று பார்த்தனர். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை இந்தப் பள்ளி நடத்தும் என்று இதன் செயல்திட்டங்கள், பங்காளித்துவ உறவுப் பிரிவின் உதவி இயக்குநர் லூயிஸ் சூ, 38, தெரிவித்தார். வெளிப்புற சாகசப் பள்ளியின் நோக்கங்களையும் இலக்குகளையும் பற்றி பொதுமக்கள் சிறந்த முறையில் தெரிந்துகொள்ள வசதியாக பொது வரவேற்பு நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.

புலாவ் உபின் வெளிப்புற சாகசப் பள்ளியில் திருவாட்டி கவடா, அவரின் மகன் கெஞ்சி இருவரும் சுவர் ஏறுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்