சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது

1 mins read

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 22 வயது ஆடவரை கரையோரக் காவல் போலிசார் கைது செய்துள்ளனர். கெடோங் கடற்பகுதியில் நேற்று அதிகாலை 12.46 மணி அளவில் நீந்திக் கொண்டிருந்த அந்த ஆடவரை கரையோர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானா மேரா பகுதிக்கு விரைவுப் படகில் கள்ளத்தனமாக நுழைய முயன்ற நான்கு வெளிநாட்டினர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 23 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட அவர்களுடன் 532 பெட்டிகள் வரிசெலுத்தாத சிகரெட்டுகளும் சனிக்கிழமை இரவு பிடிபட்டன.