கிழக்கு, மேற்கு ரயில் பாதையில் நேற்று 50 நிமிடங்களுக்குச் சேவைத் தடை ஏற்பட்டது. ஜூக்கூன் நிலையத்துக்கும் பூன் லே நிலையத்துக்கும் இடையே மாலை 3.45 மணி அளவில் சேவை தடைப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவீட் செய்தது. "ரயிலில் ஏற்பட்ட கோளாறினால் ஜூக்கூன் நிலையத்துக்கும் பூன் லே நிலையத்துக்கும் இடையே இரு வழிப் பாதைகளில் ரயில் சேவை இருக்காது. 4.05க்கு சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த டுவீட் செய்தி தெரிவித்தது. பின்னர் 4.30க்கு சேவை தொடங்கும் என மீண்டும் தெரிவித்தது. 50 நிமிடங்கள் கழித்து, கிழக்கு, மேற்கு இரு தடங்களிலும் சேவை மீண்டும் தொடங்கி யது. சேவை தடைப்பட்ட நேரத்தில் இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்குள் ரயில் சேவையில் மூன்றாவது தடவையாக தடங்கல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் 50 நிமிடங்களுக்கு சேவைத் தடங்கல்
1 mins read

