லாபநோக்கமற்ற அமைப்பான 'புரொஜெக்ட் சூலியா ஸ்திரீட்'டைச் சேர்ந்த 45 தொண்டூழியர்கள் டோ குவானிலுள்ள வெஸ்ட்லைட் ஊழியர் தங்கும் விடுதியில் ஏறக்குறைய 2,000 ஊழியர்களுக்கு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட சோறும் மீன்தலைக் கறியும் அளித்தனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து, பல் சுகாதார சேவை போன்றவற்றை வழங்குவதுடன் திறன் வகுப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம்
1 mins read
-

