ஜோகூருக்குள் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி ஏற்பாடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப விவரங்களை மலேசியா இன்னமும் பூர்த்திசெய்து வருவதே இந்தத் தாமதத்துக்குக் காரணம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. மே மாதம் அந்தத் திட்டம் தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் அதற்கான தேதி முடிவாகவில்லை என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டம் செயல்பாட்டுக்குத் தயாரான பின்பு நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன நுழைவு அனுமதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை
1 mins read

