காரில் சென்று கொண்டிருந்த பெண், காரை தடம் மாற்ற முற்பட்டபோது பாதசாரி மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். காரை ஓட்டி வந்த சித்தி ஐனா மதுரி என்ற பெண்ணிற்கு 4,000 வெள்ளி அபராதமும் கார் ஓட்டு வதற்கு இரண்டாண்டு தடையும் நேற்று விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரான அப்பெண்ணின் கவனக்குறைவால் 83 வயது திருவாட்டி சான் போ குவானுக்கு மரணம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6 அருகே நடந்தது. சாலையில் தடம் மாற முற்பட்ட சித்தி, திடீரென்று திருவாட்டி சான் தனது காருக்கு முன்னால் சாலையைக் கடக்க முற்படுவதைக் கண்டார். ஆனால், காருக்கும் திருவாட்டி சானிற்குமான இடைவெளி சுமார் 10 மீட்டர் மட்டுமே இருந்ததால், காரை நிறுத்த முடியாமல் அவர் மீது மோதியதைத் தொடர்ந்து சான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
பாதசாரிக்கு மரணம் விளைவித்தவருக்கு அபராதம், தடை
1 mins read

