சரவாக் நாட்டைச் சேர்ந்த கோ ஜாபிங் மரண தண்டனைக்கு எதிராக செய்திருந்த கடைசி நேர மனுவை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. கொள்ளை நடவடிக்கையின் போது ஆடவர் ஒருவரை மரக்கிளையால் தலையில் அடித்து, அவரைக் கொலை செய்ததற்காக 2010ல் 31 வயது கோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2011ல் கோவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. மரண தண்டனை சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து 2013ல் கோ மறுபடியும் மேல்முறையீடு செய்தார். அதில் தண்டனை மாற்றப்பட்டு ஆயுள்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. ஆனால் அரசு தரப்பின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து 2015 ஜனவரியில் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனைக்கு எதிரான கடைசி நேர மனுவும் நிராகரிக்கப்பட்டது
1 mins read

