மாலை உச்சநேரத்தில் இரண்டு ரயில்கள் குறைப்பு

மாலை உச்சநேரத்தில் இரண்டு ரயில்கள் குறைப்பு

2 mins read
15b167b6-4f5b-49c1-b08b-6091ff5f44ab
-

ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் சென்ற மாதம் நிகழ்ந்த மின்சாரக் கோளாறு சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு=தெற்கு, கிழக்கு- மேற்கு வழித் தடங்களில் மாலை உச்சநேர ரயில்களின் எண்ணிக்கையைச் சிறிது குறைத்திருக்கிறது. அந்த மின்தடை காரணமாக நான்கு வழித்தடங்களின் மேற்குப் பகுதி பாதிக்கப்பட்டது. போன விஸ்தா நிலையத்தில் மின் நிலையக் கோளாறு காரணமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதனால் வடக்கு=தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்ட எம்ஆர்டி வழித்தடங்களில் 100,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் சேவையும் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப்போக்குவரத்து ஆணையமும் மாலை உச்சநேரத்தில் ரயில்களின் எண்ணிக்கையைக் கூடியபட்சமாக 116க்கு குறைத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

முன்பு மாலை உச்சநேரத்தில் 118 ரயில்கள் ஓடின. கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் இரண்டு ரயில்கள் சேவையில் இருக்காது. அந்த வழித்தடத்தில் எடுத்துக் கொள்ளப்படும் மின்சாரத்தின் அளவைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி நிகழ்ந்த அந்த மின்தடை பற்றிய முழு விசாரணை முடியும் வரை இந்த ஏற்பாடு நடப்பில் இருக்கும். இதன் காரணமாக ரயில்களுக்கு காத்திருக்கும் நேரம் சுமார் 2.4 நிமிடங்கள் முதல் 3.4 நிமிடங்கள் வரை இருக்கும். இதற்கிடையே, துவாஸ் மேற்கு நீட்டிப்பு வழித்தடத்தில் அடுத்த மாத முடிவில் புதிய மின் நிலையம் தயாராகிவிடும் என்றும் அது போனவிஸ்தா நிலையத்தின் மின் நிலையத் திற்கு ஆதரவாக இருக்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.