விரிவான ஊழியரணி கருத்தாய்வு ஒன்றை மனிதவள அமைச்சு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆய்வில் 33,000 குடும்பங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேசிய அளவிலான இந்தக் கருத்தாய்வை மனிதவள அமைச்சின் மனிதவள ஆராய்ச்சி, புள்ளிவிவரத் துறை மேற்கொள்கிறது. இந்த ஆய்வில் மக்கள் தொகை குறித்த முக்கிய தகவல்கள், மக்கள் தொகையின் சமூகப் பொருளாதாரத் தன்மைகள் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டு கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப் பயன்படுத்தப்படும். இந்த ஆய்வில் பங்கேற்பதற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இணைய வசதி இருப்போர் மனிதவள கருத்தாய்வு இணையத் திட்டத்தில் கருத்துகளைத் தெரிவிக்கலாம். விரைவாகவும் வசதி யாகவும் தகவல்களை அளிக்க ஏற்ற தளமாக இது அமையும்.
மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வு
1 mins read

