ஓவன் ரோடு பகுதியில் 180க்கும் அதிகமானோருக்கு வயிற்றுப் பகுதியில் நோய் (gastroenteritis) ஏற்பட்டத்தைத் தொடர்ந்து பெக் கியோ ஈரச் சந்தையும் உணவங்காடியும் சுத்திகரிப்பு, கிருமி அழிப்பு பணிகளுக்காக இன்றும் நாளை யும் மூடப்படுகிறது. ஈரச் சந்தையும் உணவங்காடியும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும். அந்த வட்டாரத்தில் நேற்று வரையில் பலருக்கு வயிற்றுப் பகுதியில் நோய் ஏற்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை வாரியம், பொதுப் பயனீட்டுக்கழகம் ஆகியவை விசாரித்து வருகின்றன. விசாரணை முடிவு பெறவில்லை. எனினும், தற்காப்பு நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் அடிக்கடி உணவு உண்ணும் பெக் கியோ ஈரச் சந்தை, உணவங்காடியை தேசிய சுற்றுப்புற வாரியம் மூடுகிறது.
வயிற்றுப் பிரச்சினை: 180 பேர் பாதிப்பு
1 mins read

