தனியார் வீட்டு விலைகள் மார்ச் மாதத்தைப் போலவே ஏப்ரல் மாதத்திலும் இறங்குமுகமாகவே இருந்தன. நேற்று வெளியிடப்பட்ட 'எஸ்ஆர்பிஐ' எனும் சிங்கப்பூர் குடியிருப்பு விலைக் குறியீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக் கப்பட்டது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதற்கடுத்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 0.3% விலைக் குறைவு இருந்ததாக தேசியப் பல்கலைக்கழகத்தின் சொத்துச் சந்தை கல்விக் கழகம் தொகுத்த 'எஸ்ஆர்பிஐ' காட்டுகிறது. மத்திய வட்டாரத்தில் சிறிய வீடுகள் தவிர மற்றவற்றின் விலைக்குறைவு 0.4% ஆக இருந்தது. மத்திய வட்டாரத் துக்கு வெளியே சிறிய வீடுகள் தவிர மற்றவற்றின் விலை 0.2% குறைந்தது. 506 சதுர அடிக்கும் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய வீடுகளின் விலையும் 0.2% இறங்கியது.
தனியார் வீட்டு விலைகள் 0.3% இறக்கம்
1 mins read
-

