அறிவார்ந்த தேசம் எனும் இலக்கை எட்டுவதற்காக தொடர்புத்திறனை மேம்படுத்தும் முயற்சிகளை சிங்கப்பூர் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாலர் பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல், விளையாட்டு நடவடிக்கை களுக்கு உதவும் வகையில் எந்திர மனிதர்களை அறிமுகம் செய்வது தொடர்பில் பாலர் பள்ளி களுடன் தகவல் தொடர்பு மேம் பாட்டு ஆணையம் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது. சோதனை முயற்சியாக, 'பெப்பர்', 'என்ஏஓ' ஆகிய இரு எந்திர மனிதர்கள் முறையே ஜூரோங் பாய்ண்ட்டில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள மை வோர்ல்ட் ஆகிய இரு பாலர் பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.
மேலும், சூரிய சக்தி மூலம் பசுமை முறைகளில் வெளிப்புற கம்பியில்லா இணைய சேவையை விரிவுபடுத்தவும் ஆணையம் செந்தோசா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு ஊடக வர்த்தகப் பரிமாற்றத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

