உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம்

உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம்

1 mins read
ca5c47f3-4312-46d7-8926-deb1bc377970
-

உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டத்தை டெம்ப்சி சாலையில் உள்ள 'தி ஒயிட் ரேபிட்' உணவங்காடியில் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் நேற்று அறிமுகம் செய்தார். உணவு சேவைத் துறை மனித வளத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வேலைகளின் தரத்தை உயர்த்தவும் உள்ளூர் பணியாளர் களின் திறன்களை வளர்த்து முன்னேற உதவவும் இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது. மூன்று மடங்கு வேகமாக ஒயின் குவளைகளைத் துடைக்க உதவும் சாதனம், உணவு மேசைக்குச் செல்லாமலேயே வாடிக்கை யாளரின் தேவைகளை உணவங் காடிப் பணியாளர் அறிந்துகொள் ளவும் பணம் செலுத்தும் முகப் பிற்குச் செல்லாமல் இருக்கையில் இருந்தபடியே வாடிக்கையாளர் கட்டணத்தைச் செலுத்தவும் உதவும் கம்பியில்லாத் தொடர்பு முறை. இதுபோன்ற உத்திகளைப் பின்பற்றி சிங்கப்பூர் உணவு சேவைத் துறை நிறுவனங்கள் இன்னும் ஆக்ககரமாகச் செயல்பட முடியும்.

தொழில்நுட்பத்தின் மூலம் வேலைகளை மறுவடிவமைத்தல், சிங்கப்பூரரை மையமாகக் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாரான ஊழி யரணியை உருவாக்குதல், மனித வளத்தை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம் முன்வைக்கிறது.

ஒரே நேரத்தில் நான்கு ஒயின் குவளைகளைச் சுத்தப்படுத்த உதவும் சாதனத்தின் செயல்பாட்டைப் பார்வையிடும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்