தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணிகள் கருத்துகள் அறிய முயற்சி

1 mins read

எஸ்எம்ஆர்டி ரயில் நிலையங்களிலும் பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் புதிய கருவிக ளைப் பார்ப்பார்கள். 'பயண அனுபவக் கருவிகள்' என்று அழைக்கப்படும் இக்கருவி மூலம் பயணிகள் தங்கள் பயணம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இக்கருவிகள் முதலில் வடக்கு-தெற்கு, கிழக்கு=மேற்கு, வட்டரயில் பாதை ஆகிய எட்டு எம்ஆர்டி நிலையங்களிலும் உட்லண்ட்ஸ், யீ‌ஷூன், சுவா சூ காங், செம்பவாங் ஆகிய நான்கு பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலும் வைக்கப்படும்.

இந்தக் கருவிகள் மூலம் பயணி கள் தங்கள் பயண அனுபவம், நடப் பில் உள்ள ரயில் புதுப்பிப்புத் திட்டங் கள், போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பயணிகள் எளிதில் பயன்படுத் தக்கூடிய வசதிகள், ஊழியர் சேவை குறித்து திருப்தி நிலை போன்றவை குறித்து கருத்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு கருவியிலும் பயணி களின் திருப்தி நிலையைத் தெரிவிக்க நான்கு வண்ணங் களில் பொத்தான்கள் இருக் கும். "பயணிகள் அளிக்கும் கருத்துகள், யோசனைகள் எங் கள் நிறுவனத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, வசதி நிலை, சேவைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்தப் படும்," என்றார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பயணிகள் சேவைப் பிரிவின் தலைவர் திரு டேவ் ஓங்.