'திட்டு' வாங்கியவருக்கு வேலை தர முதலாளிகள் நாட்டம்

'திட்டு' வாங்கியவருக்கு வேலை தர முதலாளிகள் நாட்டம்

1 mins read

ஜூரோங் ஈஸ்ட் கடைத் தொகுதியில் இருக்கும் ஜெம் என்ற உணவு நிலையத்தில் சாப்பிடப்போன ஒரு மாது தான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவசரம் அவசரமாக சாப்பாட்டு மேஜையை அங்கிருந்த ஊழியர் ஒருவர் சுத்தப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்து அந்த ஊழியரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டார். திருவாட்டி ஃபெங் என்று தெரியவந்த அந்த 37 வயது மாது தான் திட்டியதற்காக பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அந்த மாதிடம் திட்டு வாங்கிய பிங் லை ஹெங் என்ற 64 வயது ஊழியருக்கு காதும் கேட்காது. அவரால் பேசவும் முடியாது.

அவர் அந்த உணவு நிலையத் தில் ஓராண்டு காலமாக துப்புர வாளராக வேலை செய்துவரு கிறார். மாது திட்டிய சம்பவத்துக்குப் பிறகு அந்த நிலையத்தில் வேலை பார்ப்பதை நிறுத்திவிட திரு பிங் முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு வேலை கொடுக்க பல உணவு நிலைய முதலாளிகள் முன்வந்திருக்கிறார் கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.