அதிபர் டோனி டான் கெங் யாம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை மெக்சிகோ சிட்டி சென்றடைந்தார். அவரை மெக்சிகோ நாட்டு வெளியுறவு உதவி அமைச்சர் கார்லஸ் ஆல்பர்ட்ரோ கொன்சாலஸ் அந்த நகரத்தின் அனைத்துலக விமான நிலையத்தில் வரவேற்றார். சிங்கப்பூருக்கான மெக்சிகோ நாட்டுத் தூதர் ரோகிலியோ, ஐக்கிய மெக்சிகோ மாநிலங்களுக்கான சிங்கப்பூரின் தூதர் திருவாட்டி ஜென்னி சுவா ஆகி யோரும் விமான நிலையத்தில் அதிபரை வரவேற்றனர். சிங்கப்பூரும் மெக்சிகோவும் அரசதந்திர உறவுகளை ஏற்படுத் திக்கொண்டு நாற்பது ஆண்டுகளாகின்றன. அதை நினைவு கூரும் வகையில் அதிபர் டான் அந்த நாட்டுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
ஒத்துழைப்பை விரிவாக்க மெக்சிகோவில் அதிபர் டாக்டர் டான்
1 mins read

