'பிரிட்டன் விலகினால் பிரச்சினை'

'பிரிட்டன் விலகினால் பிரச்சினை'

1 mins read
146e5ba5-8895-4dcc-8d35-6a0cade4b8fc
-

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களிக்கு மாயின் அது அந்நாட்டை வெகுவாகப் பாதிக்கும் என்றும் உலகப் பொருளியலுக்கு அது நன்மை பயக்காது என்றும் வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங் வலியுறுத்தியுள்ளார். இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கெ டுப்புக்கு முந்திய நிலவரங்களைத் தாமும் தமது அதிகாரிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மெக்சிகோ சிட்டியில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.

"ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து வெளியேற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தால் நீண்டகால அடிப்படையில் பிரிட்டனுக்குக் கணிசமான அளவில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுகிறேன்," என்றார் அமைச்சர் லிம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் சிலர், அந்நாடு சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று வாதிட் டுள்ளனர். துறைமுகம் வாயிலாக வரும் வருவாயைப் பெரிதும் நம்பி யிருக்கும் சிங்கப்பூர் தடையில்லா வர்த்தகத்தை அதிகம் சார்ந் துள்ளதாகவும் இந்த உதாரணத் தைப் பிரிட்டனும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.