மியன்மாரின் திலாவா வட்டாரத்தின் முன்னணி முதலீட்டாளார் சிங்கப்பூர்

மியன்மாரின் திலாவா வட்டாரத்தின் முன்னணி முதலீட்டாளார் சிங்கப்பூர்

1 mins read

மியன்­மா­ரில் யங்கூன் நக­ருக்கு வெளி­யே­யுள்ள பெரிய தொழிற் பேட்டை­யான திலாவா பொருளியல் வட்­டா­ரத்­தில் சிங்கப்­பூர் முன்னணி முத­லீட்­டா­ள­ராக உள்ளது என இலெவன் மீடியா குரூப் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. நாட்டின் முதலீடு, நிறுவன நிர்­வா­கத்­துக்­குப் பொறுப்பு வகிக்­கும் இயக்­கு­ந­ர­கத்தை மேற்­கோள்­காட்டி அச்­செய்தி வெளி­வந்­துள்­ளது. பொம்மைத் தயா­ரிப்பு முதல் கார்களை ஒருங்­கிணைக்­கும் நிறு­வ­னம், ஆழ்­க­டல் துறை­மு­கம் என பல தொழில்­களு­டன் யுஎஸ் $1.5 பில்­லி­யன் திலாவா சிறப்பு பொரு­ளி­யல் வட்­டா­ரம் இதுவரை யில் யுஎஸ் 4713.3 மில்­லி­யன் முத­லீட்டை ஈர்த்­துள்­ள­தாக அச்­செய்தி தெரி­வித்­தது.

இதில் யுஎஸ் $298.15 மில்­லி­யன் மதிப்­பி­லான 13 முத­லீ­டு­களு­டன் சிங்கப்­பூர் முத­லி­டத்­தில் உள்ளது. அடுத்த நிலையில் யுஎஸ் $235 மில்­லி­யன் முத­லீட்­டு­டன் ஜப்பான் உள்ளது. ஹாங்காங், தாய்­லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், பனாமா, சீனா, மலேசியா போன்றவை அங்கு முதலீடு செய்­துள்ள மற்ற சில நாடுகள். மற்ற சில நாடுகள் சிங்கப்­பூர் வழியாக அங்கு முதலீடு செய் கின்றன. எடுத்­துக்­காட்­டாக, முன்னைய ராணுவ ஆட்­சிக்கு எதிரான வர்த்­த­கத் தடைகளை தொடர்ந்து நீட்டிக்கும் அமெ­ரிக்கா, அதனைத் தவிர்ப்­ப­தற்­காக சிங்கப்­பூர் வழியாக முதலீடு செய்­வ­தாக அச்­செய்தி குறிப்­பிட்­டது.