வாழ்நாள் கல்விக்கு வாய்ப்பு

வாழ்நாள் கல்விக்கு வாய்ப்பு

1 mins read
8cf82943-8aee-427d-b466-95513eadbabb
-

சிங்கப்பூரில் வேலை பார்க்கின்ற ஊழியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்ச்சி, திறமை, அறிவைக் கற்றுக்கொண்டு மேலும்மேலும் முன்னேறுவதற்கு வசதியாக ஐந்து தன்னாட்சிப் பல்கலைக் கழகங்களும் வாழ்நாள்கல்வி நிலையங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இவற்றில் முதலாவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), தொடர் மற்றும் வாழ் நாள்கல்வி நிலையத்தைத் தொடங் கியது. தற்காலிகக் கல்வி அமைச் சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் நேற்று புதிய கல்வி நிலை யத்தைத் திறந்து வைத்தார்.

சிங்கப்பூரின் கல்வி முறையானது, மக்கள் தங்களுக்கு நாட்டமான துறைகளில் தேர்ச்சி களைப் பெறுவதற்காக இங்குள்ள உயர்கல்வி நிலையங்களில் பல வழிகளையும் தொடர்ந்து திறந்து விட்டு வருகிறது என்றும் ஐந்து தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களும் வாழ்நாள்கல்வியைப் பலப் படுத்த புதிய கல்வி நிலையங் களைத் திறக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். "புதிய வழிகளைக் காணபலரும் வழிவழியான துறைகளை விட்டுவிட்டு புதிய துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்துகிறார் கள். சிங்கப்பூரர்களை எதிர்காலத் திற்கு ஆயத்தப்படுத்த தேர்ச்சி களை அடிப்படையாகக்கொண்ட பயிற்சிப் படிப்புகளுக்கான வாய்ப்பு களை நாம் வழங்க வேண்டும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.