ஒற்றுமை ஓங்கிய கலாசார தகவல்நிகழ்ச்சி

ஒற்றுமை ஓங்கிய கலாசார தகவல்நிகழ்ச்சி

1 mins read

சிங்கப்பூருக்கே உரிய உயரிய நோன்புப் பெருநாள் அனுபவத்தில் மலாய் முஸ்லிம் கலாசாரம் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற் கான வாய்ப்பு கூடி வருகிறது. நோன்புப் பெருநாள் ஒளியூட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலாசார பாரம்பரிய ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. அதில் மலாய்க் காரர்கள் அல்லாத மற்றவர்கள் அடங்கிய 22 குழுக்கள் கலந்து கொண்டன. அவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து நேரடி யாக பலவற்றையும் நோன்புப் பெருநாள் பற்றியும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். கேலாங் சிராயில் அவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்கள். இந்தக் கலாசார மரபுடைமை ஓட்ட நிகழ்ச்சிக்கு ஹரிராயா ஒளியூட்டுக் குழுவும் பழைய, புதிய குடிமக்கள் ஒருங்கி ணைப்புக் குழுவும் கூட்டாக ஏற்பாடு செய்தன.