சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவையை நடத்தவிருக்கும் 'கோ அஹெட்' நிறுவனம் தன்னுடைய லோயாங் பணிமனையை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்தது. அங்கு நாள் முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. குடும்பத்தினர், லோயாங் வாசிகள், பேருந்து ஆர்வலர்கள், வேலை தேடுவோர் உள்ளிட்ட சுமார் 3,000 பேர் அந்த நிகழ்ச்சி களில் கலந்துகொண்டனர். கோ அஹெட் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கான அதி காரபூர்வச் சீருடை அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. கோ அஹெட் நிறுவனம் வரும் செப்டம்பரில் தனது பேருந்துச் சேவையைத் தொடங்க விருக்கிறது. பாசிர் ரிஸ், சாங்கி, பொங்கோல் ஆகிய வட்டாரங் களில் 25 பேருந்து வழித்தடங் களை இந்நிறுவனம் நடத்தும்.
சிங்கப்பூரில் பொது பேருந்துச் சேவையை நடத்தும் இரண்டாவது வெளிநாட்டு நிறுவனம் கோ அஹெட். அந்தச் சேவையை நடத்த டவர் டிரான்சிட் என்ற வெளி நாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது 'பூலிம் பேருந்து திட்டத்தை' நிர் வகித்து நடத்தி வருகிறது. கோ அஹெட் பணிமனை அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் பாசிர் ரிஸ்=பொங்கோல் நாடாளு மன்ற உறுப்பினர் சைனல் சபாரி கலந்துகொண்டார்.

