உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 302ஏ=ன் மூன்று மின்தூக்கிகளும் நேற்று முன்தினம் இரவு நான்கு மணி நேரத்துக்கு செயல்படாமல் நின்று போன தால் அந்த புளோக்கின் குடியிருப்பாளர்கள் அவதிக்கு ஆளாகினர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்தூக்கிகள் செயல்படவில்லை என அந்தக் கட்டடத்தின் 32வது மாடியில் குடியிருக்கும் ஒருவர் தெரிவித்தார். 21வது மாடியில் குடியிருக்கும் ஒருவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டிருப்பதால் மாடிப்படிகளேறி வீடு செல்ல விருப்பமின்றிக் காத்திருந்தார். காத்திருந்தோருக்காக நகர மன்றம் இருக்கைகளை ஏற்பாடு செய்தது. இரவு 9 மணிவாக்கில் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் அங்கு வந்து குடியிருப்பாளர்களுடன் உரையாடினார். படம்: ஷின் மின்
உட்லண்ட்ஸ் புளோக்கில் எல்லா மின்தூக்கிகளும் பழுது; குடியிருப்பாளர்கள் அவதி
1 mins read
-

