இந்த ஆண்டின் தேசிய நாள் அணிவகுப்புச் செயற்குழுவில் சேவையாற்ற சாதனை அளவிலான தேசியச் சேவை யாளர்கள் முன்வந்துள்ளனர். அவர்களில் 19 பேர் ராணுவ ஞானத்தையும் குடிமை நிபுணத்துவ அனுபவத்தையும் கலந்து தொண்டூழியச் சேவையாற்றி ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். குழுவில் ஒருவராக இடம் பெற்றிருக்கும் 50 வயது கர்னல் (என்எஸ்) டாக்டர் கென்னத் மாக், சுகாதார அமைச்சில் மருத்துவச் சேவை துணை இயக்குநராக இருக் கிறார். கூ டெக் குவாட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் இவர் இருக்கிறார். மருத்துவ ஆதரவு தரவேண்டிய நிலை வரும்போது எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது பற்றி குழுவுக்கு நான் ஆலோசனை கூற முடியும் என்றார் அவர்.
சாதனை அளவில் தொண்டூழியர்கள்
1 mins read

