ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் அமைந்துள்ள மெரின் கோவ் பொழுது போக்கு மையம் பெரிய அளவில் புதுப்பொலிவுடன் மறுசீரமைப்புப் பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு இதன் சீரமைப்புப் பணி 21,500 சதுர மீட்டர் பரப்பில் தொடங் கப்பட்டது. கடல் ஓரத்தில் சிறுவர் விளையாட்டுத் திடல், சக்கர நாற்காலியில் செல்வோருக்கு ஏதுவான பாதைகள், புதிய சாப்பாட்டு இடங்கள் என்று குடும்பத்தினர் ஒன்றுகூடி மகிழ்வதற்குச் சிறந்த இடமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
மறு சீரமைப்புப் பணியின்போது அங்கிருக்கும் முதிர்ச்சியான மரங்கள் யாவும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டதாக தேசிய பூங்கா வாரியம் தெரிவித்தது. பாபாலிசியஸ், ஹில் ஸ்ட்ரீட் காஃபி, மெக்டோனல்ட்ஸ், மை பிரியாணி ஹவுஸ், காஃபி பீன் & டீ லீஃப் போன்ற உணவகங்களை மெரின் கோவ் கொண்டுள்ளது. மெரின் கோவில் சி2, சி3 ஆகிய வாகன நிறுத்துமிடங்கள் அதிகமான வாகனங் களை நிறுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3,500 சதுர மீட்டரில் சீரமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடலில் 2 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திடல் வரும் புதன் கிழமையன்று திறக்கப்படவுள் ளது.

