நடிகைக்கு $700 அபராதம்

நடிகைக்கு $700 அபராதம்

1 mins read
85c9e11e-8eaa-495d-a98e-ef3da6142da0
-

கவனமில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தொலைக் காட்சி நடிகை ரூய் யென்னுக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டது. தனது பிஎம்டபிள்யூ காரை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அந்த 35 வயது நடிகை குற்றத்தை ஒப்புக்கொண் டார். இதன் காரணமாக அந்தக் கார் கிளமெண்டி அவென்யூ 2ல் உள்ள 331வது புளோக்குக்கு அருகே இருக்கும் கார் பேட்டையில் தடுப்பில் ஏறி அந்தப் பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது இடித்துவிட்டது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி பிற்பகல் 4.16 மணிக்கு நிகழ்ந்தது. யாருக்கும் காயமில்லை. மோட்டார் சைக்கிளுக்கும் காருக்கும் இலேசான சேதம் ஏற்பட்டது. தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் மற்றவர் களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் நடிகை தெரிவித்தார். இந்தத் தவறுக்காக அந்த நடிகைக்கு $600 முதல் $800 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட மாதுக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் அரசினர் தரப்பு வாதிட்டது.

தொலைக்காட்சி நடிகை ரூய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்