மரினா பே ஃபைனான்சியல் செண்டர் கட்டடத்தில் இருக் கும் உணவுக்கூடத்தில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது அவருக்கு எதிரே கூரை யிலிருந்து திடீரென்று உயிருடன் ஓர் எலி விழுந்தது. அந்த எலி அதைப்பிடிக்க வைக்கப்பட்டிருந்த பசைப்பொறி யில் மாட்டிக்கொண்டது. "எலி விழுந்ததைப் பார்த்ததும் எனக்கு பசியே போய்விட்டது," என்று கெல்வின் இயோ, 37, என்பவர் கூறியதாக தி நியூ பேப்பர் தெரிவித்துள்ளது. எலியை படம் பிடித்த அவர், பிறகு அந்தச் செய்தித்தாளுடன் தொடர்புகொண்டார். அந்த உணவுநிலையத்தின் இரண் டாவது மாடியிலிருக்கும் என்டியுசி ஃபுட்ஃபேர் கடையில் பிற்பகல் சுமார் 12.40 மணிக்கு வாத்துச்சோறு சாப்பிட்டுக்கொண் டிருந்த இயோவைப் போல அப்பொழுது அங்கிருந்த பலரும் எலி விழுந்ததும் பயந்துவிட்டனர்.
இதன் தொடர்பில் கருத்துக் கூறிய என்டியுசி ஃபுட்ஃபேர் நிறு வனத்தின் பேச்சாளர், இந்த நிறுவனம் தனது எல்லா உணவு நிலையங்களிலும் கடுமையான பூச்சுக்கொல்லி வழிகாட்டி நெறி முறைகளையும் நடவடிக்கைகளை யும் அமல்படுத்தியிருக்கிறது. அதில் எலிகளைப் பிடிக்க வைக் கப்படும் பசைப்பொறியும் ஓர் அங்கம் என்றார்.

